ட்விட்டரில் திடீர் ஆக்டிவ்… அடுத்த நிமிடமே டெலிட் : ஆர்கே சுரேஷ் ட்வீட்டால் அலர்ட்டான சைபர் கிரைம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 July 2023, 9:26 pm
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
மேலும் திருச்சியை மையமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தின் மோசடியிலும் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார். இதையடுத்து ஆர்.கே.சுரேஷ் எந்த இடத்தில் இருந்து டுவிட்டர் கணக்கை பயன்படுத்தினார் என்பதை கண்டறிய தொழில்நுட்ப ரீதியாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.