சென்னை அப்பலோவில் தயாளு அம்மாள் திடீர் அனுமதி : மருத்துவமனைக்கு விரைந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 8:54 pm

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

86 வயதாகும் தயாளு அம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலன் பாதிக்கப்பட்டு வந்தது. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவால் கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைக்காக மட்டும் மருத்துவமனையில் சென்று வந்தார்.

இந்த நிலையில் தயாளு அம்மாள் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து தாயாரின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கடந்த மார்ச் மாதம் நுரையீரல் பிரச்சினை காரணமாக தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்த நிலையில், அவர் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தயாளு அம்மாள் வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 613

    0

    0