அமமுக முக்கிய நிர்வாகி திடீர் கைது : வீடு புகுந்து தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு.. ஆளுங்கட்சி அழுத்தம்?!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 8:00 pm

அமமுக முக்கிய நிர்வாகி திடீர் கைது : வீடு புகுந்து தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு.. ஆளுங்கட்சி அழுத்தம்?!

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்தின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளராக இருந்துவருபவர் மணிகண்டன். திருவாரூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் வசித்துவரும் மணிகண்டன் கட்சி வளர்ச்சிக்காக இரவு பகல் பராமல் அயராது பணியாற்றி வருபவர்.

மேலும் ஆளும் திமுக கட்சி செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி அரசு உயர் அதிகாரிகளுக்கு தொடர் புகார் மனுக்களும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்த நிலையில், ஆளும் திமுக தரப்பு நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக எஸ்.பி ஜெயகுமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று அதிகாலை குரும்பேரியில் உள்ள மணிகண்டன் வீடு புகுந்து எவ்வித காரணமும் அவரிடம் கூறாமல் அவரை தரதரவென இழுத்து சென்றனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்த வயதான பெற்றோர்கள், அவரது மனைவி ஆகியோர் போலீஸாரிடம் காரணம் கேட்டபோது அவர்களையும் அராஜகமாக மிரட்டிய காவல்துறையினர் உங்களையும் கைது செய்வோம் என எச்சரித்தனர்.

காவல்துறையினர் அராஜகமாக நடந்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஒன்றிய செயலாளர் மணிகண்டனை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!