முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மீது திடீர் தாக்குதல்… அதிமுக வேட்பாளரை கடத்தியதால் பரபரப்பு : முழு விபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2022, 2:12 pm
கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவரை கடத்த நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் காரை மறித்து, கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கரூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
நாகம்பட்டி பாலம் அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நான்குக்கு மேற்பட்ட வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முன்னாள் அமைச்சர் வாகனத்தை மறித்து கார் கண்ணாடியை உடைத்தனர்.
முன்னாள் அமைச்சர் உடன் வந்த கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருவிக என்பவரை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று மதியம் 2 மணிக்குள் துணைத் தலைவர் தேர்தல் முடிவடைவதால் வேட்பாளரை கடத்தியதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர் காரில் அழைத்து வந்தவரை கடத்திச் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.