திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் உயிரிழந்த பங்காரு அடிகளார் : மேல்மருவத்தூருக்கு படையெடுக்கும் பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 7:09 pm

திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் உயிரிழந்த பங்காரு அடிகளார் : மேல்மருவத்தூருக்கு படையெடுக்கும் பக்தர்கள்!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். இவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலை ஆதிபராசக்தி கோயில் என்று அழைப்பர். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக உள்ள இவரை வணங்கும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களால் பங்காரு அடிகளார் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்த கோயிலுக்கு நிறைய சிறப்பு உண்டு, இந்த கோயிலின் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபட செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளார் மறைவு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மேல்மருத்வத்தூருக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 414

    0

    0