காதலுக்கு பச்சைக்கொடி.. நிச்சயம் முடித்த கையோடு சுற்றுலா வந்த ஜோடி : தனியார் விடுதியில் காதலர் திடீர் மரணம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 7:09 pm

வேலூர் : திருமண நிச்சயதார்த்தம் செய்த வேலூரை சார்ந்த மென்பொறியாளர் புதுப்பெண்ணுடன் புதுச்சேரிக்கு வந்த புதுமாப்பிள்ளை திடீர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். சென்னையில் மென்பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணான இளவேனில் என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

காதலை ஏற்ற பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கடலூர் சாலையில் உள்ள நோனங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் 2 ம் தேதி கடற்கரைக்குச் சென்று விட்டு விடுதியில் இரவு தங்கிருந்தபோது, காலை 9 மணியளவில் ரமேஷுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணி அளவில் ரமேஷ் மீண்டும் மயங்கி விழுந்துள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தினருடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார் இளவேனில். பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமண நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய உள்ள நிலையில் சுற்றுலா வந்த புதுமாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1391

    0

    1