கடலூரை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் திடீர் முடிவு : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த 500 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 மார்ச் 2024, 8:59 மணி
Dmk
Quick Share

கடலூரை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் திடீர் முடிவு : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த 500 பேர்!!

கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 500 பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

பாமக சார்பில் கடந்த 1999ல் தருமபுரி தொகுதி எம்.பியாக இருந்தவர் பு.த.இளங்கோவன். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த இவர் பாமகவில் இருந்து விலகி கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் தருமபுரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார் இளங்கோவன். இந்நிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
விருத்தாசலம் தொகுதியில் 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருந்தவர் விடி கலைச்செல்வன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்தார்.

பின்னர் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவினார். இந்நிலையில், அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கடலூர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் நகர முன்னாள் செயலாளர் விடி.கலைச்செல்வன், Ex.M.L.A., பு.தா.இளங்கோவன், Ex.M.P., ஆகியோர் தலைமையில் அதிமுக., அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 182

    1

    0