அடுத்தடுத்து 5 பட்டாசு கடைகளில் திடீர் தீ விபத்து : எத்தனை பேர் உயிரிழப்பு? தமிழக கர்நாடக எல்லையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 6:56 pm

அடுத்தடுத்து 5 பட்டாசு கடைகளில் திடீர் தீ விபத்து : எத்தனை பேர் உயிரிழப்பு? தமிழக கர்நாடக எல்லையில் பரபரப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் பட்டாசுகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து அருகில் இருந்து மதுபான கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கும் தீ பரவியதால் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

இதை அடுத்து உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் இங்கும் அங்கும் வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு தொடர்ந்து எரிந்து வருவதால் அருகில் மக்கள் யாரும் செல்ல இயலாத சூழ்நிலை உள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளும் ஈடுபட்டு வருவதுடன் பொது மக்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்பட்டு இருக்கும் நிலையில் உயிர் சேதம் குறித்த தகவல் உடனடியாக இன்னும் வெளியாகவில்லை. தீயணைப்பு பணிகள் முடிந்த பிறகு அது பற்றிய விவரம் வெளியாக கூடும் என தெரிகிறது.

எனினும் இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அருகில் இருந்த லாரி இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் மற்றும் கடைகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?