கோவை ரயில் நிலைய வளாகத்தில் திடீர் தீவிபத்து: பயணிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு..!!

Author: Rajesh
28 March 2022, 10:02 am

கோவை: கோவை ரயில்நிலையத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் இன்று காலை உணவு தயார் செய்யும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கடும் புகை மூட்டம் நிலவியது.இதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்தால் ரயில் நிலைய வளாகத்தில் புகை மூட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து மற்றும் புகைமூட்டம் காரணமாக காலை நேரத்தில் கோவை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?