சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ : விசாரணையில் ஷாக்… மீண்டும் கோவையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 5:13 pm

கோவை கவுன்டர் மில்ஸ் பகுதியில், சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்ததனால் பரபரப்பு, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர், மில்ஸ் அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் கவுண்டமில்ஸ் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில், இன்று காரின் அடி பாகத்தில் சிறிய அளவில் தீப்பிடித்துள்ளது.

சற்று நேரத்தில், அடிபாகத்தில் இருந்து மேலே எழும்பிய, தீ நன்றாக பிடித்து, கார் முழுவதும் பற்ற ஆரம்பித்தது, உடனடியாக அப்பகுதியைச் சார்ந்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயனைப்பு துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர், நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த கார் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது எனவும், காரின் பொருத்தப்பட்டிருந்த கேஸ் லீக் ஆனதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0