கரணம் தப்பினால் மரணம்… ஓடும் காரில் திடீர் தீ : சாதுர்யமாக மனைவியை காப்பாற்றிய கணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 6:44 pm

திருப்பூர் : பல்லடம் அருகே ஓடும் காரில் தீ விபத்தில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70) தனது மனைவி ராஜேஸ்வரியுடன் காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மாருதி ஆல்டோ காரில் சென்றுகொண்டிருந்தனர்.

கார் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளயம் அருகே சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் திடீரென புகை மூட்டத்துடன் தீ மளமளவென ஆரம்பித்தது.

இதனை கண்ட சுப்பிரமணியம் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தனது மனைவி ராஜேஸ்வரியை காரில் இருந்து அவசர அவசரமாக இறக்கி கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.

பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்தையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தால் கார் முற்றிலும் எரிந்து எழும்புக்கூடு போல் காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் அதிர்ஷ்ட வசமாக கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 715

    0

    0