எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ.. பேட்டரி வாகனங்களால் தொடரும் அவலம் : சமயோஜித புத்தியால் உயிர்தப்பிய வாகன ஓட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 1:11 pm

திருப்பூர் : புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே இ பைக் பேட்டரி தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் புகை ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு அதை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம் நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் அந்த பேட்டரி அதிக அளவிலான புகையை வெளியேறியதால் அதை சாலையோரமாக வைக்க, திடீரென் தீ பிடித்து எரியத் துவங்கியது. பெட்ரோலுக்கு மாற்றான பேட்டரி வாகனங்கள் பலர் வாங்க நினைத்து வரும் நிலையில் தொடர்ந்து பேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1640

    0

    0