மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்தில் திடீர் தீ : மின் கசிவு காரணமாக விபத்து.. அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 9:37 am

மின் கசிவு காரணமாக எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா சமீபத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் செல்வது வழக்கம். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு தினமும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இந்த நிலையில் இரவு அரக்கு பகுதியில் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு 24 பயணிகள் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.

அவர்கள் பயணித்த பேருந்து விஜயநகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.

எனவே பேருந்து டிரைவர் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் பேருந்து முழுவதுமாக எரிய துவங்கியது. எனவே பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி உயிர்த்தப்பினார்.

ஆனால் பயணிகளின் உடைமைகளும் தீக்கிரையாகி விட்டன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாகி விட்டது.
தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu