பழனி பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு… முன்னறிவிப்பின்றி கடும் விலை உயர்வாக பக்தர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 11:18 am

பழனி பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு… முன்னறிவிப்பின்றி கடும் விலை உயர்வாக பக்தர்கள் அதிர்ச்சி!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவீதி, பேருந்துநிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 455கிராம் நிகரஎடை கொண்ட பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் டப்பா ரூபாய் 35க்கும், பஞ்சாமிர்தம் டின் ரூபாய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் பஞ்சாமிர்தம் விற்பனை விலையானது முன்னறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி பஞ்சாமிர்த டப்பா மற்றும் டின் வகைகளுக்கு தலா 5ரூபாய் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி அரைக்கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் டப்பா பஞ்சாமிர்தம் ரூபாய் 35க்கும், டின் வகை பஞ்சாமிர்தம் ரூபாய் 45க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழனி முருகனின் அருட் பிரசாதமான பஞ்சாமிர்த விற்பனையை திருக்கோவில் நிர்வாகம் சேவையாக பார்க்காமல் லாபநோக்கத்தில் செயல்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் பலகோடி ரூபாய் வருமானம் தரும் பழனி கோவில் பிரசாதத்தின் விலையை உயர்த்தியது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரைக்கிலோ பஞ்சாமிர்தம் 25ரூபாய் மற்றும் 30ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளில் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாமிர்த பிரசாத விற்பனையை முன்னறிவிப்பின்றி பழனி திருக்கோவில் நிர்வாகம் திடீரென உயர்த்தியுள்ளது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 317

    0

    0