யாருக்கு யாரு கெடு விதிக்கறது.. இப்ப பாரு : ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு.. அதிர்ச்சியில் திமுக அமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2022, 2:46 pm
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரியத்துறை தொடர்பாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை சில விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன் வைத்திருந்தார். அதில் தகுதியில்லாத நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இது பற்றி பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன் அதன் முழு விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என்றும், புரிதலின்றி அண்ணாமலை விமர்சித்துள்ளதாகவும், அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்தார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பிஜிஆர் நிறுவனத்துக்கு மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.