பிரதமர் வருகையின் போது திடீர் சாலை மறியல்.. மோடியை பார்க்க விடாமல் தடுக்க திமுகவினர் நடத்திய நாடகம் : பாஜக குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், அந்த கோவிலில் வழிபாடு செய்யும் ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சாயல்குடி காவல்துறை பாரபட்சமாக ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மேலும் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பதாக கூறியும், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
குறிப்பாக,சாயல்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சல்மோன் என்பவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மணி நேரமாக சாலை மறியல் போராட்டமானது நடந்தது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் அணிவித்து நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று வந்துள்ள நிலையில், தற்போது நடந்த இந்த சாலை மறியல் போராட்டமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அங்கு வந்த கடலாடி வட்டாட்சியர் போராட்டம் நடத்திய பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி சாலையில் நடந்த இந்தப் போராட்டத்தால், பிரதமர் மோடியை வரவேற்க ராமேஸ்வரம் செல்வதற்காக பாஜகவினர் செல்லும் வழியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால், கட்சியினரின் வாகனங்களும் தேங்கி நின்றன.
திட்டமிட்டே திமுக அரசு மோடியை பார்க்க விடாமல் தடுப்பதற்காக இந்த போராட்டத்தை இரண்டு மணி நேரமாக நீடிக்க விட்டதாக கட்சியினர் முனுமுனுத்தபடியே அங்கிருந்து கடந்து சென்றனர்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.