அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் தற்கொலை.. பணி சுமையா? கடன் தொல்லையா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 9:50 pm

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் நாகப்பட்டினம் நாகநாதர் சன்னதி தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஸ்வரன் இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் வீட்டை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார் இதனை அடுத்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விக்னேஸ்வரன் உயிரிழப்பிற்கு பணி சுமையா அல்லது கடன் தொல்லையா காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகை மருத்துவமனைக்கு மாற்றலாக்கி வந்த விக்னேஸ்வரன் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!