கோவை பெண் கொலையில் திடீர் திருப்பம்.. ஸ்கெட்ச் போட்ட பக்கத்து வீட்டு இளைஞர்.. விசாரணையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2024, 9:21 am
கோவை பெண் கொலையில் திடீர் திருப்பம்.. ஸ்கெட்ச் போட்ட பக்கத்து வீட்டு இளைஞர்.. விசாரணையில் ஷாக்!
கோவை அருகே கடன் தொல்லை காரணமாக பக்கத்து வீட்டில் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில் ரேணுகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பின்னர் இரவு வீடு திரும்பியபோது இரத்த வெள்ளத்தில் ரேணுகா சடலமாக கிடந்துள்ளார். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து ரேணுகாவை கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்றை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அப்போது இறந்து போன ரேணுகாவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: இ-பாஸ் இருந்தா மட்டும் வாங்க.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு.. ஊட்டி, கொடைக்கானல் வியாபாரிகள் எதிர்ப்பு!
அதில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது சதீஷ் என்பது உறுதிசெய்யபட்டது. இதனை அடுத்து போலீசார் சதீஷை விசாரணை மேற்கொண்டபோது அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதோடு கடன் சுமை அதிகமாக இருந்ததால் அவரது காரை அடமானம் வைத்திருந்து அதற்கு பணம் செலுத்த முடியாமல் போனதால்,பக்கத்து வீட்டில் புகுந்து நகையை திருட சென்றதாகவும் இவரை பார்த்த ரேணுகா, சத்தம் போட்டதால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட வந்த ஐஜி பவானிஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி கேமராக்களை அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.