கர்நாடகா குக்கர் வெடிகுண்டு வழக்கில் திடீர் திருப்பம்… தமிழகத்தை சேர்ந்த இருவரை அழைத்து சென்ற என்ஐஏ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 2:24 pm

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகருக்குட்பட்ட ராம் காலனி மற்றும் நல்லூர் மண்டலத்திற்குட்பட்ட சிறுநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர் .

ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என் ஐ ஏ முகமை அதிகாரிகள் சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 860

    0

    0