அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாஜக நிர்வாகியை சிக்க வைக்க சதி.. பகீர் ஆடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
24 ஆகஸ்ட் 2024, 4:14 மணி
sozha
Quick Share

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பிரமுகர் பார்த்திபன்.

இவர் தனது வீட்டின் அருகே உள்ள விளையாட்டு திடலில் காலை சுமார் 5.30 மணியளவில் நடை பயிற்சிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கடந்த 17-8-23 அன்று வெட்டி கொலை செய்தது

இந்த கொலை வழக்கில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்கில் முக்கிய நபரான முத்து சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில்
போலீசார் அவரை தேடி வந்த நிலையில் மாரம்பேடு கண்டிகை பகுதியில் பிரபல
ரவுடியான காந்திநகர் அருகே உள்ள சோலையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன் மற்றும் ஞாயிறு சதீஷ் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணிடம் அதிமுக பிரமுகரான பார்த்திபன், சிஸ்யா பாபு இருவரையும் கொலை செய்து விடுங்கள் என்றும் இருவரையும் கொலை செய்துவிட்டு அதை கேஆர் வெங்கடேசன் ஆனந்திடம் சொல்லி முத்து சரவணன் மூலம் கொலை செய்ததாக பழியை கே ஆர் வெங்கடேஷ் மீது போட வேண்டுமென என முத்து சரவணனிடம் அசோக் என்பவர் தனது மாமா அவரிடம் பேசுவதாக தெரிவிக்கிறார்.

பார்த்திபனை கொலை செய்தால் தங்களுடைய ஆதரவு மற்றும் பண உதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஜாபர் என்பவரும் பார்த்திபனும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் பார்த்திபன் ரவுடி முத்து சரவணனை 25 லட்ச ரூபாய் மதுரையில் பிரபல உணவகத்திற்கு சென்று காவல்துறை எஸ் பி ஜெயக்குமாரிடம் வழங்கி
முத்து சரவணனை தீர்த்துக்கட்ட உள்ளதாகவும் அதனால் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளியை கொலை செய்ய வேண்டும் தமிழகத்தை அதிர செய்யும் வகையில் அந்த கொலை இருக்க வேண்டும் என பேசும் ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள ஆடியோ குறித்தும் உண்மைகளை அசோக் அவருடைய மாமா என செல்போனில் பேசுவது பிரபல ரவுடி காது குத்து ரவியா யார் என்பது குறித்து அசோக்கிடம் உரிய விசாரணை மேற்கொண்டு பார்த்திபன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பார்த்திபன் கொலை வழக்கில் பாஜக OBC அணியின்மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேசனை சிக்க வைக்க சதி திட்டம் நடத்தியவர்கள் மற்றும் கொலையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பார்த்திபன் கொலை வழக்கில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆடியோவில் பேசும் முத்து சரவணன் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் பார்த்திபன் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக ஆடியோ வெளியாகி உள்ளதால் மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ரவுடிகள் உள்ளிட்ட பலர் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

  • Pawan ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!
  • Views: - 220

    0

    0