திண்டுக்கல் : தடம் மாறும் திருமண வாழ்க்கை தம்பி முறை என்று வரும் நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவர் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள் மற்றும் கள்ளக்காதலன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குருக்களையன்பட்டியில் நேற்று காலை தாய் சௌந்தரம்(62)மற்றும் மகன் செல்வராஜ் (வயது 42)மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது
சம்பவ இடத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அவரது மனைவி சுபஹாசினி கணவர் மற்றும் மாமியார் சாவில் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று விசாரித்து கொண்டிருந்தபோது கூட்டத்திற்குள் ஒன்றும் தெரியாதது போல் கோபிகிருஷ்ணன் இருந்துள்ளார்
சுபஹாசினி பதில் முன்னுக்கு முரணாக இருந்ததால் அவருடைய செல்போன் அலைபேசியை நோட்டமிட ஆரம்பித்தார்கள். அதிகாலை 5 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரணை நடத்தியதில் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பி முறை உறவான கோபிகிருஷ்ணன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தனது கணவர் செல்வராஜ் பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் கோபிக்கு செல்வராஜ் 7லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொடுத்துள்ளார். அதனை 2லட்சத்தை திருப்பி கொடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
கள்ளக்காதல் தொடர்பால் கணவர் மற்றும் மாமியாரை கொல்வதற்கு சுபாஹசினி திட்டம் தீட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது. மேலும் கோபிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களான வடமதுரை அருகே செங்களத்துபட்டியை சேர்ந்த ஆனந்த் மற்றும் உதயகுமார் கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது
இரட்டைக் கொலை நடைபெற்று இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில் 12மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.