நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : வேறு திசைக்கு செல்லும் வழக்கு…. தாயிடம் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 6:21 pm

திருச்சி அருகே நுாடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகேயுள்ள தாளக்குடியை சேர்ந்த சேகர்-மகாலட்சுமி ஆகியோரின் 2 வயது மகன் சாய் தருண் தனியார் மருத்துவமனையில் இறந்து போனார்.

உடலை கைப்பற்றி கொள்ளிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்த நிலையில் இரவு உணவாக நுாடுல்ஸ் கொடுக்கப்பட்டது. எஞ்சிய நுாடுல்ஸ்சை பிரிட்ஜில் வைத்து காலையில் மீண்டும் காலை உணவாக குழந்தைக்கு கொடுத்ததாக தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று குழந்தையின் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைக்கப் பெற்று உள்ளது. அதில் குழந்தையில் உடலில் அலர்ஜிக்கான லேசான அறிகுறியும், தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களும் உள்ளதாகவும், விலா எலும்பில் முறிவு ஏற்பட்டள்ளதாகவும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொலையாக இருக்குமோ என்று சந்தேகமடைந்து தொடர்ந்து விசாரணை, மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தையை துாக்கிக்கொண்டு தாய் மகாலட்சுமி சென்று கொண்டிருந்த போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோட்டில் அப்படியே மயங்கி இருமுறை கீழே விழுந்துள்ளார்.

குழந்தை மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த போது இருமுறை கீழே விழுந்ததை பார்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, இதன் காரணமாக உடலில் காயம் ஏற்பட்டு குழந்தை விழுந்து இறந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ