திருச்சி அருகே பிரபல ரவடியை கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் : தம்பியை கேலி செய்ததால் ரவுடியை கொன்றதாக கைதான அண்ணன் வாக்குமூலம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 March 2022, 1:06 pm
திருச்சி : பிரபல ரவுடி கௌரிசங்கர் வெட்டி கொலை வழக்கில் திருப்பமாய் அண்ணன் தம்பி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கௌரி சங்கர் (வயது 35) . இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. பிரபல ரவுடி மண்ணச்சநல்லூர் குணா , சுந்தரபாண்டி இவர்களின் நெருங்கிய நண்பர் கெளரி சங்கர் ஆவார்.
கௌரிசங்கர் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் கடந்த 27 ம் தேதி வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது மாலை ஆறு மணி அளவில் சமயபுரம் புதுத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கௌரி சங்கர் ஐ தொடர்பு கொண்டு பிறந்தநாள் விழா ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பிறந்த நாள் விழாவை கார்த்தி, சித்தார்தன், 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசிர்வாதம் வாங்கி விட்டு சென்றனர்.
இந்நிலையில் ரவுடி கௌரிசங்கர் வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள அவருக்கு சொந்தமான தேங்காய் நார் கம்பெனியில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக சமயபுரம் கார்த்தி உள்ளிட்டோரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை செய்தனர்,
பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் சித்தார்த் (வயது 25), இவரது தம்பி விஷ்ணு (வயது 23) ஆகியோர் இருவரும் தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது ரவுடி கௌரிசங்கர் அண்மையில் விஷ்ணுவை கடுமையாக அடித்து தாக்கி உள்ளார் . இதுதொடர்பாக பிறந்ததின விழா கொண்டாடிய போது ஏன் அடித்தீர்கள் என விஷ்ணுவின் அண்ணன் சித்தார்த்தன் ரவுடி கெளரி சங்கரை கேட்டுள்ளார் .
மது போதையில் இருந்த ரவுடி கௌரிசங்கர் அனைவரும் முன்பு சித்தார்த்தை மிகவும் கேவலமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி லேசாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விஷ்ணுவையும் இவரது அண்ணன் சித்தார்த்தை பார்த்து கேவலமாக சிரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் சித்தார்த் இருவரும் வீட்டிலிருந்து நள்ளிரவு கௌரிசங்கர் தேங்காய் நார் கம்பெனியில் தூங்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்த இரும்பு கம்பி (கடப்பாரையால் ) தலையிலும், முகத்திலும் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சித்தார்த்தை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . மேலும் தலைமறைவாக உள்ள விஷ்ணுவை ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்