திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை : பயிற்சி மாணவிகள் படுகாயம்

Author: kavin kumar
17 February 2022, 2:26 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை அலுவலகத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் 2 மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரே உள்ள கூட்டுறவு மேலாண்மை நிர்வாக கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்று இப்பயிற்சியில் தோ்ச்சிப் பெறுவோருக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சான்றிதழ், நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்குமான பயிற்சி சான்றிதழ் மற்றும் கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.

இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதன் காரைகளும் பெயர்ந்த நிலையில் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக இக்கட்டிடத்தின் பெரும்பான்மையான மேற்கூரை மேலும் சேத மடைந்து இருந்தது. மேற்கூரையில் இருந்த கான்கிரீட் சிமெண்ட் திடீரென்று பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்கு நின்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அந்த கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

ஆனாலும் கான்கிரீட் சிமெண்ட் கற்கள் விழுந்ததில் 2 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அரசு கட்டிடங்களின் மேல் தளத்தில் உள்ள செடிகள், குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!