நடுவுல கொஞ்சம் சாலையைக் காணோம்.. திடீரென சாலை 15 அடி உள்வாங்கியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 2:47 pm

நடுவுல கொஞ்சம் சாலையைக் காணோம்.. திடீரென சாலை 15 அடி உள்வாங்கியதால் பரபரப்பு!!

விழுப்புரம் கும்பகோணம் சாலையில் உள்ள ஏ.கே குச்சிபாளையம் கிராமம் அருகே உள்ள மலட்டாரு பாலத்தில் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அந்த பாலம் ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அந்த சிறிய பாலத்தின் அருகே சுமார் 15 அடி அளவிற்கு சாலை உள்வாங்கியது.

ஏ. கே குச்சிபாளையம் கிராமத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த பொழுது அந்தப் பாலத்தின் கீழே நீரோட்டத்தினால் ஏற்பட்ட மண் அனுப்பினால் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதியில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து வளவனூர் காவல்துறையினருக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்க அந்த கிராமத்தினர் கற்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!