திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… சடலமாக கிடந்த நேவல் காவலர் : நாகை துறைமுகம் அருகே பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 6:10 pm

நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேவல் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் இன்று அதிகாலை 4 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முகாம் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்ட சக காவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டபடி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு உயிரிழந்த ராஜேஷ் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மேலும் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாகையில் இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கடற்படை காவலர் 30 குண்டுகள் கொள்ளளவு கொண்ட இன்சாஸ் துப்பாக்கியால் தனது கழுத்துப் பகுதியில் சுட்டுக் கொண்டதில் ஒரு குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 410

    0

    0