குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்த பெண்.. தாங்க முடியாத வலி.. வயிற்றை கிழித்து தற்கொலை செய்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 1:20 pm

குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்த பெண்.. தாங்க முடியாத வலி.. வயிற்றை கிழித்து தற்கொலை செய்த சோகம்!

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே மேலக்கூனியூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி. இவர் கூலி தொழிலாளியாக உள்ளார்.

இவருக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

இதனால் துரைப்பாண்டி-பிச்சம்மாள் தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிச்சம்மாள் கடந்த சில ஆண்டுகளாக குடல் இறக்கம் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

சம்பவத்தன்று பிச்சம்மாளுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்த அவர் வீட்டில் இருந்த பிளேடால் தனது வயிற்றை தானே கிழித்து கொண்டார்.

இதனால் ரத்தம் பீறிட்டதால் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பிச்சம்மாளை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிச்சம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 1085

    0

    0