கரும்பு காட்டுக்குள் கேட்ட சத்தம்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 2:20 pm

கரும்பு காட்டுக்குள் கேட்ட சத்தம்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!!!

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தை சார்ந்த எட்டாம் வகுப்பு அரசு பள்ளிமாணவி அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை சிறுவன் தனிமையில் இருக்க கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது கரும்பு தோட்டத்திற்கு வந்த மணிகண்டன் என்ற இளைஞர் சிறுவனை கரும்பால் அடித்துவிட்டு பள்ளி சிறுமியிடம் பாலியல் வண்புனர்வில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டதில் பரசுரெட்டிப்பாளையத்தை சார்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்புனர்வில் ஈடுபட்டது உறுதிபடுத்தபட்டது.

இதனையடுத்து சிறுமியிடம் பாலியல் வன்புனர்வில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 540

    0

    0