திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை… சிபிசிஐடி விசாரணைக்கு திடீர் மாற்றம் ஏன்? பள்ளி வளாகம் முன் அதிரடிப்படை குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 2:12 pm

மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே தனியார் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்த திருத்தணி தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகள் பூசானம் மற்றும் முருகம்மாள் தம்பதியரின் இளைய மகள் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர். பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலவியதால் மாணவி பயின்று வந்த இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர தாசன் மப்பேடு உதவி ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் போலீசார் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து விடுதியில் மற்ற மாணவர்களுடைய பெற்றோர்கள் விடுதியை முற்றுகையிட்டு தங்களுடைய பிள்ளைகளை காண வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ் கல்யாண், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுக்கும் விதமாக அதிரடி படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவரும் என உறுதியளித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!