வாட்டி வதைக்கும் வெயில்… ஜில் தண்ணீரை தேடும் பொதுமக்கள்.. மண்பானை குடம் விற்பனை அமோகம்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 4:03 pm

திண்டுக்கல்லில் தற்பொழுது 37 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் குழாய் பொருத்தப்பட்ட மண்பானை குடம் விற்பனை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இன்று 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், மோர், கரும்பு ஜூஸ் மற்றும் நொங்கு போன்ற உணவுகளை அதிகமாக வாங்கி உண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாகத்தை தணிக்கக் கூடிய குடிநீரை அருந்துவதற்காக இயற்கையான சத்துக்களை தரக்கூடிய மண் பானைகளில் தண்ணீரை ஊற்றி அதனை பயன்படுத்தி வருவார்கள்.

இதற்கிடையே திண்டுக்கல்லில் தற்பொழுது மண்பாண்ட கடைகளில் குழாய் பொருத்தப்பட்ட பிரத்தியேக மண்பானை குடங்கள் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவை ரூபாய் 250 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மண்பானை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!