கொடையில் வெளுத்து வாங்கிய கோடை மழை : சுற்றுலா பயணிகளுக்கு டபுள் ஹேப்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 8:46 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் கொடைக்கானலில் நிலவிய வறண்ட சூழல் மாறியது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த பல நாட்களாக கொடைக்கானலில் மழை பெய்யாமல் வறண்ட சூழல் நிலவி இருந்தது.

அருவிகள் நீரின்றி இருந்தது. தற்போது பெய்த இந்த கோடை மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி கருமை நிறத்தில் மழை நீர் கொட்டியது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் தற்போது பெய்த கோடை மழை காரணமாக கொடைக்கானலில் ரம்யமான ஒரு காலநிலை நிலவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 420

    0

    0