மேட்டுப்பாளையம் TO நெல்லைக்கு கோடைகால வாரந்திர சிறப்பு ரயில்: இன்று முதல் இயக்கம்…பயணிகள் வரவேற்பு..!!

Author: Rajesh
23 April 2022, 9:01 am

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால வாரந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று துவங்கபட்டது.

தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி இந்த ரயில் நேற்று இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இன்று காலை7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.

அதே சிறப்பு ரயில் இன்று இரவு7.45 மணிக்குமேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ரயில் கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு புறப்பட்டது.

இதுவரை நேரடியாக தென் மாவட்டங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் சேவை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது முதன் முதலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டமான திருநெல்வேலிக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


இதனை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு தெரிவித்து கொண்டாடினர். மேலும் தென் மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க முதல் நாளே 80 சதவீதம் பேர் முன்பதிவு முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி