யாருகிட்ட உங்க வேலைய காட்டுறீங்க.. கமுக்கமாக கவனிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் : கலக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Author: Rajesh
20 April 2022, 2:17 pm

பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் சூழ்நிலை ஏற்படும் போது, எந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில், பிரச்சனை எழுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெளியான திரைப்படங்கள் தான் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2. இந்த இரு படங்களும் திரையரங்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுமே தற்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் மோதிக் கொண்டு வருகிறது. இதனிடையே பீஸ்ட் படம் இப்பொழுது கலவையான விமர்சனங்களை பெற்று கொஞ்சம் இந்த படத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் புத்திசாலித்தனமாக பீஸ்ட் பட காட்சிகளை ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு சில தியேட்டரில் 5 காட்சிகள் இருக்கும் இடத்தில் மூன்று காட்சிகளை கேஜிஎப் 2விற்க்கு, இரண்டு காட்சிகள் பீஸ்ட் படத்திற்கும் ஒதுக்குகின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கேஜிஎப் 2 படத்தை பார்க்க வைக்க ரசிகர்களை மறைமுகமாக தூண்டுகின்றனர்.

இதனால் தற்போது திரையரங்கில் பெரும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தை விட்டு விட்டு, லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கேஜிஎப் 2 படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது.

இதனால் பெரிய அதிருப்தியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த திரையரங்குகளில் இந்த மாதிரி செயல்படுகிறது என்று கமுக்கமாக கவனித்து வருகிறது. இதனால் தியேட்டர்களும் சற்று கலகத்தில் தான் இருக்கிறது.

தற்சமயம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சன் பிக்சர்ஸ், அடுத்து தான் தயாரிக்கும் படங்களை வெளியிடும் உரிமையை யாருக்கு கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க கூடாது என தியேட்டர் உரிமையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் உன்னிப்பாக கவனித்து அவர்களை சரியான இடத்தில் அடிக்க பதம் பார்த்துக் கொண்டிருக்கிறதாம்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1303

    0

    0