SUNDAY அதுவும் நாளைக்கு மால், கடைகள், உணவகம் என எதுவுமே இருக்காது.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 2:49 pm

SUNDAY அதுவும் நாளைக்கு மால், கடைகள், உணவகம் என எதுவுமே இருக்காது.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மே 5ஆம் தேதியான நாளை வாரத்தின் கடைசி நாளான ஞாற்று கிழமை அன்று மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக 41-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை குறித்தும், மேலும் வணிகர்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்பதை குறித்தும் பேசும் மாநாடாக இந்த விடுதலை முழக்க மாநாடு நாளை நடைபெற உள்ளது.

குறிப்பாக வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், உயர் அதிகாரிகளால் ஏற்பட கூடிய பிரச்சனைகள் என வணிகர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கிலும் இந்த விடுதலை முழக்க மாநாடானாது நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

41-வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வணிகர்கள் ஒன்று கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எப்படி அமித்ஷா அதை யோசிக்காம விட்டார்? விதி மீறல்.. வழக்குப்பதிந்த போலீசார்..!!

அதே போல இந்த மாநாட்டில் தங்க சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து சங்கிலி விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் சாமானிய வணிகர்கள் பலரும் பாதிப்படைகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு தீர்மானங்களும் எடுக்க உள்ளதாகவும் அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அதனை சட்டமாக்க வேண்டுமென கோரிக்கைகளையும் வைக்க உள்ளதாக வணிக சங்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு தீர்மானங்கள், திட்டங்களை வகுப்பதற்கு 41-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனால் நாளைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், மொத்த வணிக நிறுவனங்கள், சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட், உணவகங்கள், பெரிய மால்கள் என அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!