தங்கம் வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ் : சவரனுக்கு அதிரடி விலை குறைப்பு… ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2022, 11:13 am

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.

பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.

அதன்படி இன்று தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,737-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து,கிராம் ரூ.63.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!