மளிகை சாமான்கள் வாங்கச் சென்ற இடத்தில் செல்போன் திருட்டு… சிசிடிவியில் சிக்கிய பலே தம்பதி..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 9:51 pm

சீர்காழி பிரபல சூப்பர் மார்க்கெட்டில் செல்போனை திருடிய தம்பதியினரின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி மேற்கு வீதியில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றக்கூடிய ஊழியரின் செல்போனை காணாமல் போனது. அப்போது, கடைக்கு பொருட்கள் வாங்க வந்த கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து தந்திரமாக திருடி மளிகை பொருட்களை போட்டு மூடி திருடி செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன் காணாமல் போன ஊழியர் கடையின் சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது, தம்பதியினர் இருவரும் சேர்ந்து திருடி செல்லும் காட்சி தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த செல்போன் திருடிய சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!