அப்பவே தலைவன் மாஸ்… பிரஸ் மீட்டில் கெத்தாக புகைப்பிடித்த நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் Unseen Video..!!

Author: Babu Lakshmanan
16 September 2022, 4:48 pm

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் செய்யாத சாதனைகளே கிடையாது. பஸ் கண்டக்டராக இருந்து தமிழ் திரையுலகையே ஆளும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார் என்றால், அவர் நடிப்பும், அவரது ஸ்டெயிலும்தான் காரணம்.

பழைய கால இயக்குநர்கள் முதல் தற்போதைய இளம் இயக்குநர்கள் வரை அனைத்து தரப்பினரின் கதைகளிலும் நடித்து வருகிறார். தற்போது, அவர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் எந்த ஒரு அன்சீன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பரவி வரும். அந்த வகையில் 1995ம் ஆண்டு சிங்கப்பூரில் பிரத்யேகமாக ரஜினிக்கென்றே ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

அப்போது, பிரஸ் மீட்-ல் கலந்து கொண்ட ரஜினி கையில் cigarette உடன் பதிலளித்திருக்கிறார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…