முன்னாள் முதல்வர்கள் குறித்து இழிவாக பேசிய ஹெச் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படும் காவல் கண்காணிப்பாளர்? தமிழ்புலிகள் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2022, 2:26 pm
கோவை : பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரை இழிவாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யாமல் பாஜகவிற்கு விசுவாசமாக காவல்நிலையம் செயல்படுவதாக தமிழ்ப்புலிகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவையில் கடந்த டிசம்பர் 22ம் தேதி பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் காளிராஜை கண்டித்து இந்து முன்னணி, பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாரதியார் பல்கலைகழகத்தில் திராவிடர் கழகத்தினர், கலந்து கொண்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதில் பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தந்தை பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரை இழுவுபடுத்தியும், பெண்களை கொச்சைப்படுத்தியும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தமிழ்புலிகள் கட்சியினர், எச்.ராஜா மீது இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியது, முன்னாள் முதலமைச்சர்களை இழிவாக பேசியது, வன்முறையை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதி செய்யக்கோரி கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் அனுமதியின்றி கூட்டம் கூடுதல் என்ற சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதுள்ளனர். என்ன பிரிவுகள் எனச் சொல்லாமல் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழ்ப்புலிகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மார்க்ஸ் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் திராவிட இயக்கத்தினர் மக்களின் பிரச்னைகளுக்காக நடத்தும் போராட்டங்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால் எச்.ராஜா மீது புகாரளித்தும், வழக்குப்பதிவு செய்யாமல் பாஜகவிற்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு எச் ராஜா வின் மீது வழக்கு பதிவு செய்ய கடந்த இரண்டு மாதமாக சட்ட ஆலோசனை கேட்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எச் ராஜா மீது சட்டப்படி பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல் ஆதரவாக செயல்படும் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.