சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூப்பர் ஸ்டார் : ரஜினிக்கு தம்பியாக நடித்தவர் வில்லனாகிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 4:04 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் அவர் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்த படத்திற்கான அப்டேட் வர துவங்கியுள்ளது.

அதே போல தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

அவர் அடுத்ததாக ‘ரெண்டகம்’ என்ற படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினிகாந்த் இணையும் படத்தில் அரவிந்த் சாமி எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

தற்போது இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இருப்பினும், நடிகரின் மெளனமே சம்மதம் என ரசிகர்கள் கருதுகின்றனர். 31 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமியை ஒன்றாகப் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

ரஜினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ என்ற கேங்ஸ்டர் படத்தில் சகோதரர்களாக நடித்தனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 508

    0

    0