துணை நடிகர்களான இரட்டையர்கள் கைது… போதையில் போலீசாருக்கே மிரட்டல்!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2025, 6:32 pm
திருத்துறைப்பூண்டி அருகே மதுபோதையில் காவல் நிலையத்திற்கு தீவைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த சினிமா துணை நடிகர்கள் இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதையும் படியுங்க: பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி கோட்டகம் பகுதியில் ஓவரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்களான பாரதிராஜா ,பாரதமணி ஆகிய இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் மது போதையில் நின்று வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் .
அப்போது அங்கு வந்த காவலர் தனபால் இங்கு நின்று தகராறுகள் ஈடுபடக்கூடாது என்றும் வெடி வெடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .
அப்போது காவலர் தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி ஐஜி டிஐஜி அனைவரையும் எங்களுக்கு தெரியும் எடையூர் போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தி விடுவோம் என்று பேசி உள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த காவலர் தனபால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனையடுத்து துணை நடிகரான பாரத மணி பாரதிராஜா இருவரையும் போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.