BSP மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு… ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கும் பொறுப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
22 ஜூலை 2024, 6:28 மணி
ar
Quick Share

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த பொறுப்பில் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் இன்று மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த் மற்றும் கோபி நாத் ஆகியோர் தலைமையில் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் யார்? என்பதை தேர்வு செய்யும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒருமனதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தனை பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக தேர்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாத் மற்றும் அசோக் சித்தார்த், மாயாவதி உத்தரவின் பேரில் தமிழக தலைவராக பி. ஆனந்தனை தேர்வு செய்துள்ளதாகவும், துணை தலைவராக சேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக மாநில அளவிலான ஆர்பாட்டம் நடத்த இருப்பதாகவும், சிபி ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி 5அல்லது 6ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் அனுமதிக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசு மீது நம்பிக்கையில்லை எனவும் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் தான் இது போன்ற கொலை நடந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் பலரும் போலியாக இருப்பதாக தோன்றுவதாகவும், திமுகவினர் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுவதாகவும் அவர் குற்றச்சாட்டினார். மேலும் சனிக்கிழமை ஆளுநரை சந்தித்து சிபிஐக்கு மாற்றக்கோரி தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிதாக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி. ஆனந்தன் யார்? 1974ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்த ஆனந்தன், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 1992 முதக் 1997 வரை படித்தவர்.

கல்லூரில் சேர்மனாக இருந்த போது அப்போதை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்புடன் வழி நடத்தியவர். அதன் பின் மூத்த வழக்கறிஞர்ராஜா இளங்கோவிடம் ஜுனியர் வழக்கறிஞராக பணியாற்றி பின்பு தனி அலுவலகம் வைத்து தற்போது 100க்கும் மேற்பட்ட ஜுனியர் வழக்கறிஞர்களை கொண்டு தொழில் புரிந்து வருகிறார்.

சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா,உள்ளிட்ட நடிகர்களின் விவகாரத்து வழக்குகளை நடத்தியவர், எனவும் தற்போது 26ஆம் ஆண்டாக தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற உத்தரவை பெற்று கொடுத்தவர் ஆனந்தன். மறைந்த ஆம்ஸ்ட்ராங் மீதுள்ள பல வழக்குகளில் ஆனந்தன் ஆஜராகி அவரை விடுவித்தவர்.

ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஆவடி சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் தங்கி படிக்க இலவசமாக இடமும் உணவும் வழங்கி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

பகுஜன் சமாஜ் கட்சியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களுடன் 2006 ஆம் ஆண்டு முதல் இணைந்து தொடர்ந்து பணியாற்றியவர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு 41 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 220

    0

    0