இப்படி ஒரு செயலை செய்து நெகிழ வைத்த சூர்யா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
14 April 2022, 2:44 pm

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட கூடியவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தியே இருக்கிறது. இது போன்ற கதைகள் மக்களிடம் கொண்டு போவதை நோக்கமாக வைத்தும் நடித்து வருகிறார்.

உதாரணமாக ஜெய்பீம் படம் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்த படம். விவசாயம், கல்வி போன்ற நலன்களில் அக்கறை கொண்டுள்ள நல்ல மனிதர் நடிகர் சூர்யா.

இந்த நிலையில், இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும், தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு வாழ்த்துக்களை திரை பிரபலங்கள் உட்பட எல்லாரும் தெரிவித்து வரும் நிலையில் சற்று வித்தியாசமாக சூர்யா அவர்கள் ஒரு வீடியோ போட்டு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் காளை மாடை கையில் பிடித்து நடந்து வரும்போது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பெருமிதத்துடன் பதிலுக்கு வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!