தமிழக அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்… அகவிலைப்படி உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 4:43 pm

தமிழக அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்… அகவிலைப்படி உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதேபோன்று மாநில அரசு பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 195

    0

    0