கும்பாபிஷேகம் முடிந்து பழனியில் இரண்டே நாட்களில் ஆச்சரியம் : மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 11:45 am

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும் ,இன்றும் நடைபெற்றது.

இதில் 3 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 694 கிராமும், வெள்ளி 17,539 கிராமும் ,வெளிநாட்டு கரன்சி 692 நோட்டுகளும் கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவிகள் கோவில் அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எணணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் அறங்காவலர் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கும்பாபிசேகம் முடிந்த நிலையில் பக்தர்கள் உண்டியிலில் செலுத்திய காணிக்கைகள் 4 கோடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!