பட்டா கொடுத்தறலாம்.. ஆனா ரூ.10 ஆயிரம் செலவாகுமே : நில அளவீடு செய்து பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய ”சர்வேயர்” கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 9:18 pm

விழுப்புரம் : பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் வீட்டு மனை பட்டா கோரி பதிவு செய்திருந்த நிலையில் இடத்தை அளவீடு செய்ய வட்ட சார் ஆய்வாளராக பணிபுரியும் அன்புமணி என்பவர் நிலத்தை அளவீடு செய்து பின் பட்டா வழங்குவதற்கு ஜோசப் என்பவருடன் 10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜோசப் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி அன்புமணிக்கு லஞ்சம் கொடுக்க சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜோசப் நில அளவியல் பணம் கொடுக்க அன்புமணியை தொடர்பு கொண்டபோது அவர் விழுப்புரம் சாலை கே.வி. கே. தியேட்டர் அருகே வரும்படி அன்புமணி இடம் பணம் கொடுக்கும் பொழுது ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அன்புமணியை சுற்றி வளைத்தனர்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) பணியாற்றி வரும் அன்புமணி(35) விசாரணை செய்தனர். விசாரணை செய்த பின் அவரிடம் இருந்த ஆவணங்கள் நில அளவை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நில அளவையர் அன்புமணியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் செஞ்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 988

    0

    0