தப்பியது மேயர் பதவி : முடிவுக்கு வந்தது ‘டிராமா’? இன்பச்சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்..!!
Author: Udayachandran RadhaKrishnan29 ஜூலை 2024, 2:17 மணி
51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு புகார்களை கவுன்சிலர் வைத்தனர்.
இதையடுத்து மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாநகராட்சி கூட்டத்திற்கு ஒரு உறுப்பினர் கூட வரவில்லை. இதனை அடுத்து மேயராக மகாலட்சுமி தொடர்வார் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.
கூட்டத்தை புறக்கணித்து திடீரென நேற்று 30 கவுன்சிலர்கள் வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டதாகவும், மீதமுள்ள கவுன்சிலர்களும் இன்று மாநகராட்சி கூட்டத்திற்கு வரவில்லை என்றும் எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: எல்லாமே பொய் வழக்கு.. எங்களை ஒண்ணும் செய்ய முடியாது : விஜயபாஸ்கரை சந்தித்த சி.வி. சண்முகம் சவால்!
இதனை அடுத்து இப்போதைக்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் பதவிக்கு ஆபத்து இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0