பாலாவுடனான சண்டையை மறந்த சூர்யா.. ஆனா இதுக்கு பின்னால இப்படி ஒரு வில்லத்தனம் ஒளிஞ்சு இருக்கா.?
Author: Rajesh27 May 2022, 10:45 am
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் மிக முக்கியமானவர் தான் பாலா. தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பாலாவின் கம்பேக்வுக்காக தான் அதிக ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு தனது முந்தைய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால், அவரின் சமீபத்திய திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பபை மீண்டும் பூர்த்தி செய்ய இந்த முறை இயக்குனர் பாலா சூர்யாவுடன் கோர்த்து புதிய படத்தை ஆரம்பித்து இருந்தார்.
இந்த படத்தில் சூர்யா உடன், ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, மமிதா பாஜு என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நாகர்கோவிலில் நடைபெற்ற போது, இயக்குனர் பாலா சூர்யாவுடன் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் படப்பிடிப்பின் பாதியில் கிளம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், இயக்குனர் பாலா, ஷூட்டிங்கில் சூர்யாவை அதிகமாக தொந்தரவு செய்து வருகிறார் என்றும் அதனால் மீண்டும் அந்த படம் மீண்டும் துவங்குமா என்பது குறித்து இணையத்தில் வதந்திகள் பரவின.
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
இந்த நிலையில் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட மிக விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதற்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இணையத்தில் உலாவி வந்த வதந்திகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
என்னதான் பாலா, சூர்யா இடையே சண்டை வந்தாலும் அதையெல்லாம் மறந்து பெரிய மனுஷன் தனமாக சூர்யா இவ்வாறு நடந்துயுள்ளார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு பக்கம் இப்படத்தை தயாரிப்பது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் என்பதால் படம் பாதியிலேயே நின்று போனால் சூர்யாவுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக தான் இவ்வாறு சூர்யா செய்துள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.