ஸ்கூட்டியில் வந்த 3 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்த மர்மநபர்கள் : இளைஞர் பலி.. விசாரணையில் SHOCK!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரி பாளையம் முத்துராஜா வீதியை சேர்ந்தவர் ரவி வயது 50 . தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அருள் பாண்டியன் வயது 28 தச்சு தொழில் செய்து வந்தார்.
இவரது நண்பர்கள் கஸ்தூரி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் வயது 26 கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த வசந்த் வயது 26. அருண்குமார் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியிலும் வசந்த் கோவையில் உள்ள ஐடி கம்பெனியிலும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அருள்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அருண்குமார், வசந்த் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அதிகாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள காட்சி முனைக்கு வந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் காட்சி முனையிலிருந்து மேட்டுப்பாளையம் நகரை கண்டு ரசித்தனர். அப்போது காட்சி முனையில் ஒரு காரில் வந்த நபர்களும் இருந்தனர் அப்போது இரண்டு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
சிறிது நேரத்திற்கு பின்னர் அருள் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அடிவாரப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: திருமணம் ஆகாத விரக்தி? விஷம் குடித்து தற்கொலை செய்த விஏஓ : கோவையில் SHOCK!
அப்போது சாலையில் வனவிலங்குகள் கடந்து சென்றதாக தெரிகிறது .உடனே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வனவிலங்குகளை செல்போனில் புகைப்படம் எடுத்து நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த வழியே காட்சி முனையில் காரில் வந்த மர்ம நபர்களும் வந்துள்ளனர்.. இரண்டு சக்கர வாகனத்தை கார் கடந்து சென்ற பின்னர் மீண்டும் கார் திரும்பி வந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த மூன்று பேர் மீதும் காரை ஏற்றியதாக தெரிகிறது. காரை ஏற்றிய பின்னர் நிற்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அருள்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் அருண்குமார் வசந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த அருண்குமார் வசந்த் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் உயிரிழந்த அருள் பாண்டியனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..
சி சி டி வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களை கடந்து சென்றபின்னர் மீண்டும் திரும்பி வந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
காரில் வந்த மர்மநபர்கள் பிடிபட்டால் தான் இதுகுறித்து உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.