‘திட்டுங்க, ஆனா அழகுத்தமிழில் திட்டுங்க’ : அண்ணா விருது பெற்ற ஒருவர் ஒருமையில் திட்டியதாக தமிழிசை வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 2:02 pm

2 மாநிலங்களுக்கு இவள் ஆளுநராக இருப்பதாக என்று ஒருமையில் அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார் என வேதனை தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் .திட்டுவதற்கு கூட மரியாதையுடன் அழகு தமிழை பயன்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தொடக்கி வைத்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன விழாவில் பேசினார்.

அப்போது பேசிய அவர், சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள்.

திட்டுவதற்கு கூட மரியாதையுடன் அழகு தமிழை பயன்படுத்துங்கள். விமர்சனம் என்பது தமிழரின் பங்கு ஆனால் அதை மரியாதை சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்.

என்னை அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா என்று ஒருமையில் பயன்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்த அவர் திட்டுவதற்கு கூட தமிழில் தமிழ் மொழியை மரியாதையுடன் பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொண்ட அவர் வீட்டில் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

  • Salary in cinema 25 வருஷம் சினிமால இருந்தா சம்பளம் கிடைக்காது, ஆனால்?- காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ