ஹெல்மெட் அணிந்திருந்தால் ஸ்வீட்… இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் : அசத்திய போக்குவரத்து காவலர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 9:52 am

ஹெல்மெட் அணிந்திருந்தால் ஸ்வீட்… இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் : அசத்திய போக்குவரத்து காவலர்கள்!!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை உள்ளது. இங்கு தினந்தோறும் வாகன எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதே வேளையில் கோவை மாநகரத்தில் வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் விதமாகவும், சாலை விதிகளை பின்பற்றாமல் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போலிசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே கோவை ஜிபி சிக்னலில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தும்,ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!